மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரு வாரங்களுக்கும் மேலாகி விட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதா​ஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து
x
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரு வாரங்களுக்கும் மேலாகி விட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதா​ஸ் தெரிவித்துள்ளார். ஆனார் அவசர​ சட்டத்துக்கு இன்னும் ஆளுநர் அனுமதி அளிக்காமல்,  சமூகநீதி சார்ந்த விஷயங்களுக்கு அனுமதி அளிப்பதில், தேவையின்றி கால தாமதம் செய்வது வருத்தமளிப்பதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். சட்ட ஆலோசனை என்ற பெயரில், ஆளுனர் முட்டுக்கட்டை போடக் கூடாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில்  தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்