பவானிசாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பவானிசாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
x
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு இன்று முதல் அக்டோபர் மாதம் 28ம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீர் திறப்பால் ஈரோடு , மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்