"ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
x
சாத்தான்குளம் விவகாரத்தில்  சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சி.பி.சி.ஐ.டி மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு, அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கையை பார்க்கும் போது, ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்த கொடுமை என்றால்,  ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமை படுத்தியிருப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். நீதித்துறை நடுவர் விசாரணை செய்வதை தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு பெருத்த அவமானம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தவறிழைத்தோர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும்,  அப்பாவிகளாக காவல் நிலையத்திற்கு வந்து பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்