பெட்ரோல், டீசல் விலை 21-வது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் விலை 8 ரூபாய் அளவிற்கும், டீசல் விலையானது 10 ரூபாய் அளவிற்கும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை 21-வது நாளாக உயர்வு
x
ஜூன் 7ஆம்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி 76 ரூபாய் 7 காசுகளுக்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 83 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. அதே போல கடந்த 7ஆம் தேதி 68 ரூபாய் 22 காசுகளுக்கு விற்பனையான டீசல் இன்று 77ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. ஒரே மாதத்தில் 21 முறை விலையேற்றம் கண்டுள்ள பெட்ரோல் லிட்டருக்கு 7 ரூபாய் 52 காசுகளும், டீசல் 9 ரூபாய் 23 காசுகளும் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.

Next Story

மேலும் செய்திகள்