சட்டமன்ற உறுப்பினர் அலுவலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதாக புகார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதாக புகார்
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் சந்திரபிரபா உள்ளார். இவர் பல மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்  அலுவலகத்திற்கு வராததால் அந்த பகுதி முழுவதும் சமூக விரோதிகளின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். தற்போது மது பானம் அருந்தும் கூடாரமாகவும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி உள்ளதாகவும், இதனை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். Next Story

மேலும் செய்திகள்