இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு

இ பாஸ் இல்லாமல் சென்ற மின் வாரிய ஊழியரை காவல் துறையினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம்
x
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநின்றவூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூ வீலரில் வந்த மின்வாரிய ஊழியர் ஒருவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, இ பாஸ் இல்லாத அவரை போலீசார் தாக்கினர். இந்த செய்தியானது தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதனைப் பார்த்த தமிழ்நாடு மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இ பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?, அத்தியாவசிய பணியில் உள்ள மின்வாரிய ஊழியரிடம் எப்படி இ பாஸ் கேட்கலாம் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இ-பாஸ் விவகாரம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க  தமிழக டிஜிபி-க்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்