சென்னையில் கொரோனா பாதிப்பு - அதிகம் உள்ள 7 மண்டலங்களின் நிலவரம்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
x
* அதிக பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரம் மண்டலத்தில் 5 ஆயிரத்து 981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 647 பேர் குணமடைந்துள்ளனர். 

* 2 ஆயிரத்து 237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

* 2வது இடத்தில் இருக்கும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 4 ஆயிரத்து 869  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

* 2 ஆயிரத்து 489 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 72 பேர் கொரோனாவுக்கு இங்கு பலியாகி உள்ளனர். 

* தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 ஆயிரத்து 652  பேர் இதுவரை பாதிக்கப்பட்ட நிலையில், இது 3வது இடத்தில் உள்ளது. 

* 2 ஆயிரத்து 542  பேர் குணமடைந்த நிலையில், 2 ஆயிரத்து 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இங்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். 

* 4வது இடத்தில் உள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில், 4 ஆயிரத்து 149 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர். 

* அண்ணாநகர் மண்டலம் 5வது இடத்தில் உள்ளது. இங்கு 3 ஆயிரத்து 972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 919 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து மூன்று பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை இங்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். 

* 6வது இடத்தில் உள்ள திரு.வி.க.நகர் மண்டலத்தில் மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது. இங்கு ஆயிரத்து 965 பேர் குணமடைந்த நிலையில், ஆயிரத்து 320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மண்டலத்தில் 71 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

* 7வது இடத்தில் இருக்கும் அடையாறு மண்டலத்தில், மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 239  பேர் குணமடைந்துள்ள நிலையில், 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 23 பேர் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்