"கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள்" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்

பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி கொரோனா அறிகுறியை சொன்னால் 10 முதல் 15 சதவீத இறப்புகளை தவிர்க்க முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
x
பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி கொரோனா அறிகுறியை சொன்னால் 10 முதல் 15 சதவீத இறப்புகளை தவிர்க்க முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கணக்கெடுக்க வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சென்னையில் கொரோனா உறுதி  செய்யப்பட்டு தப்பிச் சென்ற 299 பேரில் 150 பேர் காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 149 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்