கொரோனா பயத்தில் தேர்வுத்துறை ஊழியர்கள் - எப்படி சமாளிக்கப் போகிறார் புதிய இயக்குனர்?
குறைந்த ஊழியர்களை வைத்து கொண்டு தேங்கி கிடக்கும் தேர்வு பணிகளை புதிய இயக்குநர் எப்படி சமாளிகக் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், இயக்குனர், இணை இயக்குனர், உதவி இயக்குனர், தட்டச்சர், கண்காணிப்பாளர் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், 250 பேர் பணியாற்றும் இந்த அலுவலகத்தில், தற்போது 30 முதல் 40 ஊழியர்கள் மட்டுமே தினமும் பணிக்கு வருகின்றனர். இதனால், தேர்வுபணிகள் பல தேங்கி கிடக்கின்றன. இதனிடையே, இணை இயக்குனர் மற்றும் இயக்குனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொடக்கக்கல்வித்துறை இயக்குனரிடம் கூடுதல் பொறுப்பாக தேர்வுத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்கக்கல்வித்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை ஆகிய இரு துறைகளுக்கு பொறுப்பு வகிக்க கூடிய பழனிச்சாமியிடம் மூன்றாவதாக தேர்வுத்துறை இயக்குனர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த ஊழியர்களை கொண்டு 3 துறை பொறுப்புகளையும் எப்படி கையாளுவார் என்பது கல்வித்துறை வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.
Next Story