காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர சம்பவம் - காதலன் வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்த கும்பல்

ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் காதலன் வீட்டை 60 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர சம்பவம் - காதலன் வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்த கும்பல்
x
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன் சொந்த ஊரில் வசித்து வரும்  தர்ஷினி என்ற பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே சொந்த ஊருக்கு வந்த திருப்பதி தன் காதலியை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு அவரை அழைத்துள்ளார். இதுகுறித்த தகவல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே, 60 பேர் கொண்ட கும்பல், திருப்பதியின் வீட்டுக்கு  சென்றது. அங்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் உடைத்து  நொறுக்கி தீ வைத்து எரித்தது. இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து பெண் வீட்டை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்