ஏசி பயன்படுத்த கூடாது என்ற தடையை மீறிய வங்கிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

திருவெறும்பூர் அருகே உள்ள கைலாஷ் நகரில் இயங்கி வரும் 2 வங்கிகளில் ஏசி பயன்பாடு இருப்பதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.
ஏசி பயன்படுத்த கூடாது என்ற தடையை மீறிய வங்கிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
x
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஏசியை பயன்படுத்தக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள கைலாஷ் நகரில் இயங்கி வரும் 2 வங்கிகளில் ஏசி பயன்பாடு இருப்பதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து, வங்கிகளுக்கு சென்று சோதனை நடத்திய வருவாய் அதிகாரிகள், அங்கு ஏசி இயங்கிக் கொண்டிருந்ததையும் ஊழியர்கள் யாரும் முக கவசம் அணியாததையும் கண்டு அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். மீண்டும் இது போல் செயல்பட்டால் வங்கிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்