போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முதியவர் - 82 வயதிலும் இடைவிடாத மக்கள் பணி

82 வயதிலும் கோவையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள முதியவர்
போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முதியவர் - 82 வயதிலும் இடைவிடாத மக்கள் பணி
x
கோவையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலைகளில் தினமும் சுல்தான் பாயை பார்க்க முடியும். 82 வயதான இவரின் வேலை போக்குவரத்தை சரி செய்வது தான். போலீசாருடன் இணைந்து தன்னார்வலராக செயல்படும் இவர், தனி ஒருவராக துணிச்சலாக சாலையில் இறங்கி களப்பணி ஆற்றுகிறார். சாலையை கடக்கவே அச்சப்படும் மக்களுக்கு மத்தியில் அநாயசமாக வாகனங்களை நிறுத்துவதும் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதிலும் பம்பரமாக சுழன்று வருகிறார் இவர்.. நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அவரே சாலையில் இறங்கி போக்குவரத்தை சரி செய்வாரே அதுபோன்று சுல்தான் பாயும் கோவை மாவட்ட மக்களின் ஹீரோவாகவே தெரிகிறார். 

பன்னிமடை பகுதியை சேர்ந்த இவருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும் கூட, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே விருப்பமாம்... கழுத்தில் விசிலை மாட்டிக் கொண்டு கால்களை சக்கரமாக மாற்றிக் கொண்டு சுறுசுறுவென திரியும் இவரை பார்த்தால் பலருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு அயராத பணி... கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இந்த பணியை சேவை நோக்கில் செய்து வரும் இவருக்கு பொதுமக்கள் தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறதாம்...இந்த பணியை விரும்பி செய்வதாக கூறும் இவர், ஆரோக்யமான உணவுகளை சாப்பிட்டால் உடலையும் மனதையும் திடமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இவரிடம் இருந்து இளைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்....

Next Story

மேலும் செய்திகள்