"என்னை சாதி, மத அடையாளத்திற்குள் அடைக்காதீர்கள்" - மதுரை மாநகர ஏ.டி.ஜி.பி. முகநூல் பக்கத்தில் வேதனை பதிவு

தன்னை சாதி, மத அடையாளத்துக்குள் அடைக்காதீர்கள் என மதுரை மாநகர ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் கேட்டுக்கொண்டுள்ளார்.
என்னை சாதி, மத அடையாளத்திற்குள் அடைக்காதீர்கள் - மதுரை மாநகர ஏ.டி.ஜி.பி. முகநூல் பக்கத்தில் வேதனை பதிவு
x
தன்னை சாதி, மத அடையாளத்துக்குள் அடைக்காதீர்கள் என மதுரை மாநகர ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாம் பொறுப்பு ஏற்ற நாள் முதல் மக்கள் மற்றும் காவல்துறை இடையே நல்லிணக்கம் ஏற்பட பாடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் அவர் ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இதை மறுத்துள்ள அவர், தன்னை சாதி, மதத்துக்குள் அடைக்க வேண்டாம் என்றும், எப்போதும் போல் தமது பணி தொடரும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியுள்ளார். மாநகர ஏ.டி.ஜி.பி.யின் இந்தப் பதிவு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்