சென்னையில் இன்று கொரோனோ தொற்றிற்கு மருத்துவர் உட்பட 6 பேர் பலி

சென்னையில் இன்று கொரோனோ தொற்றிற்கு மருத்துவர், அரசு மருத்துவமனை ஆய்வக நுட்புனர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளன​ர்.
சென்னையில் இன்று கொரோனோ தொற்றிற்கு மருத்துவர் உட்பட 6 பேர் பலி
x
சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் 77 வயது ஹோமியோபதி மருத்துவர் கொரோனா தொற்றிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 50 வயது ஆண் ஆய்வக நுட்பனராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 10ஆம் தேதி கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆவடியை சேர்ந்த 40 வயது நபர் திருவொற்றியூரை சேர்ந்த 54 வயது நபர் வியாசர்பாடி, புளியந்தோப்பைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்