புத்தம் புது குடிசை மாற்று வாரிய வீடுகள் - கட்டி முடித்தும் ஒப்படைக்கப்படாத மர்மம்...

புதுக்கோட்டையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட புத்தம் புது குடியிருப்பு பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
புத்தம் புது குடிசை மாற்று வாரிய வீடுகள் - கட்டி முடித்தும் ஒப்படைக்கப்படாத மர்மம்...
x
புதுக்கோட்டை சமத்துவபுரம் அருகே, குடிசை மாற்று வாரியம் சார்பில் 120 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 972 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் சமூகவிரோதிகள் சிலர் இந்த குடியிருப்பு பகுதியை திறந்தவெளி பாராக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பல வீடுகள் திறப்பு விழா காணாத நிலையிலேயே பழுதடைந்து ஆங்காங்கே காரை பெயர்ந்து கொட்டத் தொடங்கி விட்டன. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு பழுதடைந்த வீடுகளை சீர்செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்