காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்

தர்மபுரி அருகே தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
x
தர்மபுரி அருகே தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணை பிரியாத இந்த காதல் ஜோடி ஒரே சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டனர். 

தர்மபுரி மாவட்டம் அரூர் அண்ணாநகரை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ஆனந்தராஜ். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்த இவர், தனது உறவினர் மகள் சோபியா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தராஜ்க்கு அவரின் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, ஆனந்தராஜ் தனது உறவுக்கார பெண் சோபியாவை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஊரடங்கு முடிந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக ஆனந்தராஜின் பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் இருவரும் இருந்துள்ளனர். இதனிடையே இருவரும் அரூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அங்கேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் சடலங்களையும் பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மரணத்திற்கு பிறகும் கூட இருவரையும் பிரிக்காமல் ஒரே சவப்பெட்டியில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்