"மனைவியை மிரட்டவே காதலனின் கையை பரிசளித்தேன்" - கொலையாளி அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி அருகே தன் மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்தவரின் கைகளை வெட்டிய கணவர் அதை தன் மனைவிக்கே பரிசளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை மிரட்டவே காதலனின் கையை பரிசளித்தேன் - கொலையாளி அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி
x
கிருஷ்ணகிரியில் கடந்த 3ஆம் தேதி வெட்டப்பட்டு துண்டான நிலையில் கை ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அதை மீட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். அதற்கு அடுத்த நாள் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சுடுகாட்டுக்கு அருகே கை வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. அப்போது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலசுப்ரமணி என்றும் அவர்  மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தகவல் வெளியானது. 

கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பாலசுப்ரமணியை அவர் கொலை செய்த விதத்தை கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். குற்ற வழக்கில் சிறையில் தமிழரசன் இருந்த போது அவரின் மனைவி கருவுற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தை மீது தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது அதை உறுதி செய்யும் விதமாக பாலசுப்ரமணியுடன் முறையற்ற உறவை தொடர்ந்துள்ளார் அவரது மனைவி. 

பலமுறை எச்சரித்தும் மனைவி பாலசுப்ரமணி உடனான முறையற்ற உறவை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்தார் தமிழரசன். இதனால்  பாலசுப்ரமணியை கொல்ல தமிழரசன்,திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 3ஆம் தேதி பாலசுப்ரமணியை மதுகுடிக்க அழைத்துச் சென்ற தமிழரசன், அவருக்கு மதுவை வாங்கிக்  கொடுத்து கையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த கையை கொண்டு வந்து தன் மனைவிக்கு பரிசாக கொடுத்துள்ளார். உன்னுடன் உறவில் இருந்தவனின் கை இதுதான், இனிமேலும் யாருடனும் உறவை தொடர்ந்தால் உனக்கும் இதே கதிதான் என எச்சரித்துள்ளார் தமிழரசன். 

கணவனின் இந்த செயலால் அதிர்ந்து போனார் அந்த பெண். பின்னர் தமிழரசன் தலைமறைவான நிலையில் பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்