சிறப்பு அகதிகள் முகாமில் உண்ணாவிரத போராட்டம் - அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 60க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு அகதிகள் முகாமில் உண்ணாவிரத போராட்டம் - அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
x
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 60க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முகாமில் இலங்கை தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 பேர் உள்ளனர். வழக்கு முடிந்தும் தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதாக கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தாசில்தார் மற்றும் உதவி ஆணையர் மணிகண்டன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Next Story

மேலும் செய்திகள்