சலூன், அழகு நிலையத்துக்கு வருபவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

சலூன், அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சலூன், அழகு நிலையத்துக்கு வருபவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
x
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,  அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களுக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்,  கைகளை துடைப்பதற்கு பேப்பர் நாப்கின் வைப்பதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதை தவிர்க்கும் வகையில், முன்பதிவு அடிப்படையில் அழகூட்டுதல், பிற சேவைகளை வழங்க வேண்டும், தரைகள்,மேஜை, கதவுகள், இருக்கைகள், நாற்காலிகள்  உள்ளிட்டவைகளை ஒரு நாளைக்கு ஐந்து முறை சுத்தம் செய்ய வேண்டும். அழகு சாதன கருவிகள், பொருட்கள் அனைத்தையும், ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை அழகுநிலையம், ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்