கணவருடன் வாழமறுத்த தங்கையை கொன்று நாடகமாடிய அண்ணன் - அண்ணன் உள்பட இருவர் கைது

நெல்லை அருகே தங்கையை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய அண்ணன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கணவருடன் வாழமறுத்த தங்கையை கொன்று நாடகமாடிய அண்ணன் -  அண்ணன் உள்பட இருவர் கைது
x
வடகரையைச் சேர்ந்த, நயினாரின் தங்கை ராமலெட்சுமி, கணவருடன் ஏற்பட்ட சண்டையால், பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார். அறிவுரை கூறியும், தங்கை புகுந்தவீட்டிற்கு செல்லவில்லை தெரிகிறது. ஊரார் பழிச்சொல்லுக்கு அஞ்சிய அண்ணன், தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில், தற்கொலை அல்ல கொலை என்பது தெரியவந்தது.  இதையடுத்து நயினார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்