"நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம்" - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம் - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்
x
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில், காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்குகளை  விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,  தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க தற்போது அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்ற அறைக்குள், 5 வழக்கறிஞர்களை மட்டுமே  அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சுகாதார நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதர மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் விசாரணை தொடரும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்