தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா - அலுவலகத்தை இடமாற்றினார் தேர்வுத்துறை இயக்குனர்

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
x
நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறை இயக்குனரகம் இயங்கி வருகிறது. முதல் தளத்தில் இயக்குனர் அலுவலகம் உள்ள நிலையில், இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி தன்னுடைய அலுவலகத்தை, வளாகத்தின் பின்புறம் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றி உள்ளார். தொடர்ந்து, தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பல்லாவரத்தை சேர்ந்த அவர், சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்