ஜூன் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வருகிற ஜூலை 26 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் நிலையில் ஜூன் 25 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x
வருகிற ஜூலை 26 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் நிலையில், ஜூன் 25 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பாண்டில் 17 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.  இவர்களுக்கு இணையதளம் வழியாக சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்