கோயம்பேடுக்கு அடுத்து திருமழிசையா ? - காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி

திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்படுவதால் கோயம்பேடுக்கு அடுத்து கொரோனாவின் மையப் பகுதியாக திருமழிசை சந்தை மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடுக்கு அடுத்து திருமழிசையா ? - காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி
x
திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்படுவதால், கோயம்பேடுக்கு அடுத்து கொரோனாவின் மையப் பகுதியாக திருமழிசை சந்தை மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகளை இறக்கி வைக்க போதிய இடவசதி இல்லாததால், அன்றைய தினமே காய்கறிகளை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விற்க முடியாத காய்கறிகள் டன் கணக்கில் குப்பைத்தொட்டியில் வீசி எறியப்படுகின்றன. கோயம்பேடுக்கு அடுத்து கொரோனாவின்  மையப்பகுதியாக திருமழிசை சந்தை மாறுவதற்குள், விரைந்து பணிகளை முடித்து கோயம்பேடு சந்தையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்