ஆர்.எஸ்.பாரதி கைது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி கைது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசு தட்டி எடுத்து அதிகாலையில் கைது செய்திருப்பதற்கு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உள்ளரங்கில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அதற்கு உரிய விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுதொடர்பாக 2 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நீதித்துறையை கூட மதிக்காமல் அலட்சியம் செய்திருப்பதாக, ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பு தோல்வியை மூடி மறைக்கவும்,  நிர்வாக தோல்வியை திசை திருப்பும் செயலாகவும் இந்த கைது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

பட்டியலின- பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும், சமத்துவ நீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் கட்சி திமுக என்று தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களை பார்த்து ஒருபோதும் திமுக மிரளாது என குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை தடுக்க முடியாமல் அரசு தோல்வியடைந்து நிற்பதையும், அதற்கான தார்மீக பொறுப்புகளில் இருந்து எக்காலத்திலும் தப்பித்துவிட முடியாது என்றும், ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்