தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
x
சென்னையில் கடந்த பிப்ரவரி14ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்கள் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பட்டியலின அமைப்பை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், தேனாம்பேட்டை போலீசார்,  ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்