வெளிமாநில தொழிலாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்ன? - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை தங்க வைக்க உள்ள சமூக நல கூட விவரங்களை அறிவிக்கக்கோரி கொளத்துரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி திலக்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 799 தொழிலாளர்கள் அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களுக்கான தங்கும் வசதி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
Next Story

