தேவாலய சுவர் இடிந்து சிறுவன் பலி - 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ராமநாதபுரத்தில் தேவாலய சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் பலியானதுடன் 2பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் தேவாலய சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் பலியானதுடன், 2பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.அங்குள்ள, எம்.எஸ்.கே நகர் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேவாலயத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில், ஜெப்ரி என்கிற 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் மற்றும்
பிரிசில்லா என்ற பெண்மணி ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story