"சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே 31ஆம் தேதி வரை ரயில்களை சென்னைக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டு கொண்ட நிலையில்,

* முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால், வரும் 14ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்தது. * டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட ராஜ்தானி ரயில் பெட்டிகளில் சுமார் ஆயிரத்து 100 பயணிகள் பயணம் செய்வர் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி,சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்பதால், அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்வதில் நடைமுறை சிரமம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் * எனவே, அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி வைக்க ரயில்வே துறை மூலமே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்