71 % பேர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதாக அறிக்கை - வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

வெளிமாநிலத்தவர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை விடுதிகளில் இருந்து வெளியேற்ற கூடாது என உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
71 % பேர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதாக அறிக்கை - வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
x
வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலத்தவர்,  சிகிச்சை பெற்று திரும்பும் வரை விடுதிகளில் இருந்து  வெளியேற்ற கூடாது என உத்தரவிட கோரி, கருணா மரியம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது  71 சதவீதம் பேர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார். விடுதிகளில் தங்கியிருப்போரின் வாடகையில் 25 சதவீதத்தை விடுதி உரிமையாளர் ஏற்க ஒப்பு கொண்டு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்