சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
x
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை  அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாளை முதல் குழாய் மூலம் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாளை முதல் சென்னை மாநகரில், 70 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் தெருக்களில் லாரிகளுக்கு பதிலாக குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், அதே நேரம் சமூக விலகல் உறுதி செய்யப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. ஆந்திர அரசிடம் இருந்து இந்தாண்டுக்கான கிருஷ்ணா குடீநிர் 7.6 டி.எம்.சி. பெறப்பட்டு உள்ள நிலையில், தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.3 டிஎம்.சி. நீர் கையிறுப்பில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்