கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சூளகிரியை சேர்ந்த 65 வயது மற்றும் 67 வயது மூதாட்டிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களது இல்ல நிகழ்ச்சிக்கு வந்து சென்ற விழுப்புரத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரையும் பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்