கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்

கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
x
பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் திருமழிசையில் வரும் 7ஆம் தேதி முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட உள்ளது. இதற்கான பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்