சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா

கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
x
கடந்த வாரம் கோயம்பேடு காய்கறி சந்தையை பிரிப்பது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் மட்டத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வியாபாரி ஒருவர் உட்பட சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ஒரே நாளில் பத்து பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், சட்ட விரோதமாக கோயம்பேட்டில் சலூன் கடை நடத்திய ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த நண்பர் உள்ளிட்ட 20 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை செய்த தொழிலாளர் உள்பட 5 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று வரை கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 58 ஆக இருந்த நிலையில், தற்போது 63 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்