எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடக்கம்? - நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்குவது என்பது குறித்தான 2ஆம் கட்ட அறிக்கையை நிதிதுறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழு, முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடக்கம்? - நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு
x
மத்திய அரசு அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

* சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

* தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், உள்ளிட்ட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன

* இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

* அந்த குழு ஏற்கனவே முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று தனது இரண்டாம் கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.  

* அதன் படிப்படையில், தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும்,  தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்