40,000 செடிகளில் பூத்து குலுங்கும் ரோஜாக்கள் - வெறிச்சோடி காணப்படும் பூங்கா
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 4,000 ரகங்களில் 40,000 செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 4,000 ரகங்களில் 40,000 செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதில் பாரம்பரிய ரோஜா, ஹைபிரிட் ரோஜா,பாலியன்தா, இரு வண்ண ரோஜா, மினியேச்சர் போன்ற ரககங்களில் பூக்கள் பூத்துள்ளன. தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு நடைபெறுவதால் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மத்திய மாநில அரசு உத்தரவின் பின்னரே ரோஜா கண்காட்சி நடைபெறுவது குறித்து அறிவிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா அறிவித்துள்ளார்
Next Story