அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு? - மே மாத இறுதிக்குள் அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்க திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை மே மாத இறுதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு? - மே மாத இறுதிக்குள் அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்க திட்டம்
x
அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இக்குழு பல முறை கூடி ஆய்வு மேற்கொண்டதுடன், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களை பெறுவதற்கான கூட்டங்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே சேலத்தில் கருத்து கேட்பு கூட்டத்தை முடித்த நீதிபதி குழு, அடுத்து சென்னையில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, தனது பரிந்துரை அறிக்கையை மே இறுதிக்குள் தமிழக அரசிடம், இக்குழு வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 6 ஆயிரம் இடங்கள் உள்ளன. 15 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டால் 900 இடங்களும், 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டால் 1200 இடங்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்