தாய், தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம் - மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் வெறிச்செயல்

பெரம்பலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தன் தாய், தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய், தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம் - மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் வெறிச்செயல்
x
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி செல்லம்மாள். இவர்களின் மகன் ரமேஷ். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் இவரின் மனைவி தங்கமணி குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறார். தினமும் தனது மாமனார், மாமியாரை பார்த்துவிட்டு செல்லும் தங்கமணி, வழக்கம் போல இன்று வந்த போது, இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றியதோடு, மகன் ரமேஷை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பெற்ற மகனே தாய், தந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்