கர்ப்பிணி உள்பட இருவருக்கு கொரோனா உறுதி - செவிலியர்கள், மருத்துவர்களுக்கு சோதனை

கர்ப்பிணி மற்றும் இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவத்தால், ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடி செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை அதிர வைத்துள்ளது.
கர்ப்பிணி உள்பட இருவருக்கு கொரோனா உறுதி - செவிலியர்கள், மருத்துவர்களுக்கு சோதனை
x
மதுரை மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றார். குழந்தை பிறந்த நிலையில், அவரது ரத்த மாதிரியில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, குழந்தையுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை தனிமையில் வைத்துள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர், வெளிநாட்டில் இருந்து பிப்ரவரி மாதம் சொந்த ஊர் திரும்பியது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சுகாதார நிலையத்தில் பணியாற்றிய  செவிலியர்கள், மருத்துவர் உள்ளிட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதேபோல, கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளதால், அவரும் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் வசித்த கரிசல்குளம் பகுதி முழுவதையும் சீல் வைத்து மூடிய போலீசார், கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்