தமிழக எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரம் - மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன் பாடி சோதனைச் சாவடியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன் பாடி சோதனைச் சாவடியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவிலிருந்து வரும் அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து அவசர தேவைக்காக வருபவர்களை மருத்துவர்கள் பரிசோதித்து, கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Next Story