கிண்டி வட்டாட்சியர் அலுவலக கார் விபத்து - மாரடைப்பால் உயிரிழந்த கார் ஓட்டுநர்

சென்னை கிண்டி வட்டாட்சியர் கார் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கார் திடீரென நிலை தடுமாறி டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது.
கிண்டி வட்டாட்சியர் அலுவலக கார் விபத்து - மாரடைப்பால் உயிரிழந்த கார் ஓட்டுநர்
x
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ராம்குமார்,  அம்பிகா நகரில் வசித்து வந்த நிலையில் அவரை ஓட்டுநர் சந்தீப் என்பவர் காரில் அழைத்து வந்துள்ளார். ராஜகீழ்பாக்கம் அருகே கார் வந்த போது திடீரென ஓட்டுநர் சந்தீப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் கார் திடீரென நிலை தடுமாறி டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து சந்தீப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தாசில்தார் உயிர் தப்பிய நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்