தேனியில் ரூ. 46 லட்சம் மதிப்புள்ள 4 லட்சம் முகக்கவசங்கள் - துணை முதலமைச்சர் சொந்த செலவில் வழங்கினார்

தேனியில் ருபாய் 46 லட்சம் மதிப்புள்ள 4 லட்சம் முகக்கவசங்களை துணை முதலமைச்சர் தமது சொந்த செலவில் வழங்கினார்
தேனியில் ரூ. 46 லட்சம் மதிப்புள்ள 4 லட்சம் முகக்கவசங்கள் - துணை முதலமைச்சர் சொந்த செலவில் வழங்கினார்
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொரோனா தொற்று  தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது சொந்த செலவில் 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 லட்சம் முக கவசங்களை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம் வழங்கினார். பெரியகுளம் நகராட்சிக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான  மருந்து தெளிப்பதற்கான சிறப்பு இயந்திரமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் , தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் , காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்