"ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவிப்பு" - பாதிக்கப்பட்டவர்கள் உதவ கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக இஸ்லாமிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவிப்பு - பாதிக்கப்பட்டவர்கள் உதவ கோரிக்கை
x
கோவில்பட்டி அருகே உள்ள அய்யா கோட்டையூரை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் பலர் வெளியூர்களில் வேலை செய்கின்றனர். கடந்த மாதம் சொந்த கிராமத்திற்கு வந்த அவர்களால் ஊரடங்கு காரணமாக மீண்டும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் பணமின்றி தவிக்கும் அவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ‌ அமைப்பினர் தங்களுக்கு உதவ வேண்டும் என்று 
கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்