மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் வவ்வால்கள் - கொரோனா பரவும் அச்சத்தில் புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசித்து வரும் வவ்வால் கூட்டத்தால் கொரோனா பரவும் அச்சம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் வவ்வால்கள் - கொரோனா பரவும் அச்சத்தில் புதுக்கோட்டை மக்கள்
x
நாடெங்கிலும் கொரோனாவின் அச்சம் அதிகமாக உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பரவாமல் இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் பின்புறம் உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. எனவே இந்த வவ்வால்களால் நோய் தொற்று ஏற்படுமா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்