அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கரூர் பாராளுமன்றத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 2 கோடி ரூபாயும் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு 40 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  வெண்டிலேட்டர் உட்பட பல கருவிகள் வாங்க அரசின் அனுமதி பெற்றுள்ளதாகவும், இதனால் யாரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை என்றும் ஜோதிமணி எம்.பி  கூறினார் 

Next Story

மேலும் செய்திகள்