கொரோனா பாதிப்பு எதிரொலி : 11,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எதிரொலி : 11,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு
x
கொரோனா பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனால் அறிவித்தபடி வரும் 24ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் 31ந் தேதி துவங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வரும் 7 ஆம்  தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் என்று அரசு தெரிவித்திருந்த து. ஆனால்  கொரோனாவின் தாக்கம் குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக,  இரண்டாவது முறையாக,  விடைத்தாள் திருத்தும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

Next Story

மேலும் செய்திகள்