ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை : மக்களுக்கு சேர் போட்டு அமர வைத்த அதிகாரிகள்

புதுக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை புதுமையான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை : மக்களுக்கு சேர் போட்டு அமர வைத்த அதிகாரிகள்
x
புதுக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை புதுமையான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டையில், ரேஷன் கடைகளில் பந்தல் போட்டு, பொதுமக்கள் சேர் போட்டு அமர வைக்கப்பட்டனர். கிருமி நாசினி அடிக்கப்பட்டு, கைகளை கழுவ வைத்த பின்னரே, பொதுமக்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  

திருச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் குழாய் மூலம் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, 1 மீட்டர் இடைவெளியில் கட்டம் வரையப்பட்டிருந்தது. அதில் மக்கள் வரிசையாக நின்று பணம், பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

தென்காசியில், ரேஷன் கடைகளில் மக்கள் சமூக இடைவெளி விட்டு பணம் மற்றும் பொருட்களை வாங்கி சென்றனர். தைக்கா தெருவில் உள்ள ரேஷன் கடையில் இதற்காக தனித்தனி கட்டம் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த கட்டங்களில் நின்று இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை மற்றும் பொருட்கள், நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முன்னதாக டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்கு 13 பேருக்கு மட்டுமே பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களும் கடைகளில் சமூக இடைவெளியுடன், முக மூடி அணிந்து வந்து, பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  

கரூரில் ரேஷன் கடைகளில்,தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகை மற்றும் பொருட்கள், நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வரும் 15ஆம் தேதி வரை இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், தினமும், காலை 50 பேர் மற்று மாலை 50 பேர் என 100 பேருக்கு இவை வழங்கப்படுகிறது.  

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண தொகை 1000 ரூபாயை பெறுவதற்காக, ரேஷன் கடைகளில் பொது மக்கள் குவிந்தனர். சர்ச் தெரு 17- வது வார்டு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்க, நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.  காவல்துறையினர் பொதுமக்களை வரிசையில் நிற்க அறிவுறுத்தியும், மக்கள் அதை கண்டு கொள்ளாமல் இருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்