ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை" - வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை - வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா மையத்துக்கு வந்த வெளிநாட்டினருக்கு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு வருவதாகவும், ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஷா யோகா மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்