டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா காய்ச்சல் பிரிவிற்கான படுக்கையறைகள் அமைக்கும் பணி   இஸ்லாமியா  மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதனை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 36 பேர் கண்டறியப்பட்டு  22 பேர் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.டெல்லியில் கடந்த மாதம் நடந்த இஸ்லாமிய மாநாட்டில். கலந்து கொண்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .
இவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டால் அவர்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் விதமாக மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தயார் செய்யப்பட்டு வருகிறது.பரமத்திவேலூரில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று நாமக்கல் மாவட்டம் திரும்பியுள்ள 24 பேர் தற்போது அரசு மருத்துவமனைகளில் தனிமை வார்டில்  தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அவர்கள் வசித்து வந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் மருத்துவ குழுவினர் அங்கன்வாடி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்