கொரோனா - அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் நிவாரணம்
கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைக்காக அதிமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது மார்ச் மாத ஊதியத்தை வழங்க உள்ளனர்.
கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைக்காக, அதிமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது மார்ச் மாத ஊதியத்தை வழங்க உள்ளனர். இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்.பி.க்கள், அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாயும் வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

